வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 26 செப்டம்பர் 2022 (09:15 IST)

பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷா & ஐஸ்வர்யா ராய் அணிந்த நகைகள் ஏலம்?

பொன்னியின் செல்வன் படத்துக்காக பல கிலோ எடையுள்ள உண்மையான தங்க நகைகளை அணிந்து நடித்திருந்தனர்.

தமிழ் இலக்கியத்தின் கிளாசிக் வரலாற்று நாவல்களில் ஒன்றாக கருதப்படுவது பொன்னியின் செல்வன் நாவல். வெளியாகி 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நாவலை தற்போது திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தில் குந்தவை மற்றும் நந்தினி ஆகிய கதாபாத்திரங்களில் திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த கதாபாத்திரங்களுக்காக இருவருக்கும் சோழ காலத்தைய தங்க நகைகள் தற்போது உருவாக்கப்பட்டு அணிந்து நடித்தனர். இந்த உண்மையான தங்க நகைகளை பிரபல தங்க நகை நிறுவனம் ஒன்று ஸ்பான்சர் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் பட ரிலீஸான பின்னர் அந்த நகைகளை அந்த நிறுவனம் ஏலம் விட முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.