வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 30 அக்டோபர் 2023 (08:11 IST)

பிக்பாஸ் விக்ரமன் மீது மோசடி புகார் வழக்கு பதிவு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர் தொகுப்பாளர் விக்ரமன். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் பதவியும் வகித்து வந்தார்.

பிக்பாஸ் விக்ரமனுக்கு எதிராக கிருபா முனுசாமி என்ற பெண் சமூக வலைத்தளங்களில் புகார் கூறியுள்ளார். அதில் விக்ரமன் தன்னிடம் பணம் பெற்றதாகவும், காதலிப்பதாகவும் திருமணம் செய்துகொளவதாகவும் சொல்லி, ஏமாற்றி விட்டார் என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்தார். இது சமூகவலதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து கிருபா அளித்த புகாரின் அடிப்படையில் பிக்பாஸ் பிரபலம் விக்ரமன் மீது திருமண மோசடி, எஸ்.சி.எஸ்.டி வன்கொடுமை உள்ளிட்ட 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதனால் அவர் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.