1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 20 ஜனவரி 2020 (09:24 IST)

’தளபதி 65’ படத்தை இயக்குபவர் யார்? புதிய தகவல்

தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் விஜய் நடிக்க இருக்கும் 65வது திரைப்படத்தை இயக்குவது யார் என்ற கேள்வி கோலிவுட்டில் பரபரப்பாக இருந்து வருகிறது.
 
வெற்றிமாறன், பாண்டியராஜ், பேரரசு, மோகன் ராஜா, அட்லி உள்பட ஒருசில இயக்குனர்கள் ’தளபதி 65’ படத்தை இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் வெளியான தகவலின்படி ’தளபதி 65’படத்தை பேரரசு இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
ஏற்கனவே விஜய் நடித்த ‘திருப்பாச்சி’ ’சிவகாசி’ ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்தவர் பேரரசு என்பதும் மற்ற இயக்குனர்கள் போல் இவரது சம்பளம் அதிகமாக இருக்காது என்பதும் ஆக்சன் மற்றும் காமெடியுடன் கூடிய ஒரு மசாலா படத்திற்கு பேரரசு படம் உத்தரவாதம் என்பதால் ’தளபதி 65’ படத்தை தயாரிக்கவிருக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் கருதுவதாக கூறப்படுகிறது.  இருப்பினும் ’தளபதி 65’  படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுமை காப்போம்