வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (10:26 IST)

டீ- ஷர்ட் அணிந்த ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தியில் பேசுறத பாருங்க - எதுக்கு இந்த மட்டமான வேலை?

திரை உலக பிரபலங்கள் சிலர் இந்தி மொழிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய டீசர்ட் உடைகளை அணிந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. குறிப்பாக டுவிட்டரில் இதுகுறித்து ஹேஷ்டேக் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவுக்கு எதிராக தங்களுடைய எதிர்ப்பை காண்பிக்கும் காண்பிக்கும் வகையில் இந்தி மொழிக்கு எதிராக பலர் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இதில் இளைஞர்கள்,  அரசியல் எதிர்க்கட்சிகள் , நடிகர் நடிகைகள் என பலரும் இந்தி திணிப்பிற்கு எதிராக தங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன் தம்பியுடன் சேர்ந்து " இந்தி தெரியாது போடா என்ற டீ ஷர்ட் அணிந்துகொண்டு வெளியிட்ட புகைப்படத்தை இணையவாசிகள் பங்காகமாக கலாய்த்து திட்டி தீர்த்து வருகின்றனர். காரணம்,  கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா ராஜேஷ் கபில் ஷர்மா நிகழ்ச்சியில் விருந்தினராக பங்கேற்று இந்தியில் பேசியது தான். இந்த வீடியோ கிளிப்பை தற்ப்போது வெளியிட்டு "எதுக்கு இந்த கேவலமான வேலை? என விமர்சித்து வருகின்றனர்.