ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (16:33 IST)

ஐஸ்வர்யா ராஜேஷின் 25வது படத்தை தயாரிக்கும் பிரபல இயக்குனர், உதவி செய்யும் சிவகார்த்திகேயன்!

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் உருவான ’பெண்குயின்’ என்ற திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்தார் என்பதும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட இந்த படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் ’பெண்குயின்’ படத்தை அடுத்து மீண்டும் ஒரு நாயகி முக்கியத்தும் உள்ள கதையம்சம் கொண்ட திரைப்படம் ஒன்றை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் ரத்தினம் பிரசாத் என்பவர் இயக்கவுள்ளார் 
 
இந்த படத்தில் முக்கிய வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படம் அவரது 25வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டரை நாளை அதாவது விநாயகர் சதுர்த்தி தினத்தில் காலை 11 மணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உதவி செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
கார்த்திக் சுப்பராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணையும் இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது