திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 8 மார்ச் 2018 (12:12 IST)

திருமண பந்தத்தில் இணைந்த பார்த்திபன் மகள் கீர்த்தனா

இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் மகள் கீர்த்தனாக்கு இன்று (மார்ச் 8) சென்னையில் திருமணம் நடைபெற்று வருகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் 2002ஆம் ஆண்டு ரிலீஸான ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் கீர்த்தனா. இந்தப் படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றார்.
 
இந்நிலையில் தற்போது சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் தற்போது கீர்த்தனாவுக்கும், தேசிய விருதுபெற்ற பிரபல எடிட்டரான ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்‌ஷய்க்கும் திருமணம் நடைபெற்று வருகிறது.
 
மகளின்  காதல் திருமணத்தை ஏற்ற பார்த்திபன் தமிழ் சினிமாவில் உள்ள நிறைய பிரபலங்களை திருமணத்திற்கு அழைத்திருக்கிறார் என்பது குறிப்படத்தக்கது.