ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 16 மார்ச் 2024 (03:02 IST)

விஜய்யின் ''தி கோட்'' பட ஆடியோ ரைட்ஸ்ஸுக்கு பஞ்சாயத்து!

GOAT
விஜய்யின் தி கோட் படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். ஏஜிஎஸ்  நிறுவனம் தயாரிக்கிறது.

சமீபத்தில்  நடிகர் விஜய்யின் தி கோட் படத்தின் ஆடியோ உரிமையை பிரபல டி சீரிஸ்  நிறுவனம் 24 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியதாக தகவல் வெளியானது.
 
இத்தனை கோடிக்கு வாங்கியதற்கு காரணம் விஜய்யும் ஒரு பாடல் பாடியுள்ளதால் அது பில்லியன் வியூஸ் போனால், அதன் மூலம் பல கோடி சம்பாதிக்கலாம என  நினைத்திருந்தது.
 
ஆனால், தற்போது இப்படத்தின் சேட்டிலைட் உரிமையை சன்டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளதால், இப்படத்தில் பாடல்களை டீ சீரீஸ் யூடிப்பில் போட அனுமதிக்க முடியாது என்று சன் டிவி கறாராக கூறிவிட்டதாக தெரிகிறது.
 
இதனால்,டீ சீரிஸ் தாங்கல் இப்படத்தின் ஆடியோ ரைட்ஸை 15 கோடிக்கு பெற்றுக்க்கொள்வதாக  கூறிவருகிறார்களாம்.
 
எனவே இரு தரப்பும் இடையே ஏஜிஎச் நிறுவனம் மாட்டிக்கொண்டு என்ன செய்வது என தெரியாமல் உள்ளதாம்.
 
விரைவில் இதுகுறித்த தகவல் வெளியாகலாம் என கூறப்படுகிறது. சமீபத்தில் யுவன் இசையில், விஜய் குரலில் சூப்பரான பாடல் ரெக்கார்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
அதேசமயம் ஒரு தரமான அப்டேட் விரைவில் வெளியாகும் என வெங்கட்பிரபு நேற்று அறிவித்திருந்தார். அநேகமாக முதல் சிங்கில் அப்டேட் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.