திங்கள், 20 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 15 மார்ச் 2024 (08:10 IST)

அண்டை மாநிலத்தில் மல்ட்டிப்ளக்ஸ் தியேட்டர் கட்டும் நடிகர் விஜய்

விஜய் தன்னுடைய அரசியல் வருகையை அறிவித்து விட்ட நிலையில் அவர் நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்துக்குப் பிறகு அவர் இன்னும் ஒரே ஒரு படம் மட்டுமே நடிப்பேன் என்றும் அதன் பின்னர் முழுக்க முழுகக் பொதுவாழ்வில் இறங்கப் போகிறேன் என்றும் கூறியுள்ளார்.

தற்போது 100 கோடி ரூபாய்க்கு மேல் ஒரு படத்துக்கு சம்பளமாக பெறும் விஜய், திடீரென சினிமாவில் இருந்து விலகுவதாக எடுத்துள்ள இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது. ஆனால் விஜய் முழுவதும் சினிமாவை விட்டு விலகப் போவதில்லையாம்.

அவர் பாண்டிச்சேரியில் ஒரு மல்ட்டிப்ளக்ஸ் தியேட்டர் ஒன்றை கட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாண்டிச்சேரி அரசுக்கு சொந்தமான நிலத்தை 99 வருடங்களுக்கு லீஸ் எடுத்து அதில் இந்த திரையரங்க வளாகத்தை உருவாக்க உள்ளாராம். இது சம்மந்தமாக அவர் சமீபத்தில் பாண்டிச்சேரி முதல்வரை சந்தித்து பேசியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.