சசிகுமாரின் ‘பகைவனுக்கு அருள்வாய்’ செகண்ட்லுக் போஸ்டர் வைரல்!
நடிகர் இயக்குனர் சசிகுமார் நடிப்பில் ஏற்கனவே நான்கு படங்கள் முடிக்கப்பட்டு ரிலீஸுக்கு தயாராக உள்ளது. அந்த வகையில் தற்போது மேலும் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அந்த படத்தின் டைட்டில் பகைவனுக்கு அருள்வாய்
இயக்குனர் அனீஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக நடிகை பிந்து மாதவி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் வாணிபோஜன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். துப்பாக்கியை கையில் வைத்தபடி ஸ்டைலான போஸில் இருக்கும் பிந்து மாதவியின் இந்த செகண்ட் லுக் போஸ்டரும் இணையத்தில் வைரலாகி வருகிறது