1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 15 ஜனவரி 2021 (14:44 IST)

வெளியானது சசிகுமாரின் ராஜவம்சம் டிரைலர்!

சசிகுமார் நடித்துள்ள ராஜவம்சம் படத்தின் டிரைலர் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது.

சசிகுமார் நாயகனாக நடித்துள்ள ராஜவம்சம் படத்தில் நாயகியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். மற்ற முக்கியக் கதாபாத்திரத்தில் சதீஷ், யோகிபாபு, மனோபாலா, தம்பிராமையா, ராதாரவி, ரேகா, சுமித்ரா, நிரோஷா உள்பட பலர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை டிடி ராஜா தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் டிரைலர் நேற்று பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது. கார்ப்பரேட்டுக்கு எதிராக பொங்கி எழும் கதாநாயகன் ஒருவனின் கதை போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.