விஜய் சேதுபதி இயக்குநருடன் கைகோர்க்கும் சசிகுமார் !

Sinoj| Last Modified செவ்வாய், 12 ஜனவரி 2021 (18:27 IST)

தமிழ் சினிமாவில் சுப்பிரமணியபுரம் என்ற படத்தின் மூலம் தனக்கெனத் தனி இடம் பிடித்த இயக்குநரும் நடிகருமான சசிகுமார் தற்போது,விஜய் சேதுபதி இயக்குநருடன் கைகோர்த்துள்ளார்.

தமிழ்த் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் பொங்கல் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டார்.

அப்போது, பேசிய அவர், நான் கிராமத்தில் பிறந்து அங்கேயே வாழ்து வருகிறேன். எனவே அந்த மண் மணம் குறையாமல் உள்ளது.அதனால் அத்தனை பண்டிகைகளையும் கொண்டாடி வருகிறோம். இப்போதும் எங்கள் வீட்டுப் பொங்கல் பண்டிகை எங்கள் வீட்டு மாட்டுத்தொழுவத்தில் வணங்குவது வழக்கம் என்று தெரிவித்தார். மேலும்,எனது அடுத்தப்படம் தொரட்டி பட இயக்குநர் மாரிமுத்துவின் இயக்கத்திலும் விஜய் சேதுபதி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான க/பெ ரணசிங்கம் பட இயக்குநர் விருமாண்டி இயக்கத்தில் நடிக்க உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது நடிப்பில் உருவாகியுள்ள ராஜவம்சம், எம்.ஜி.ஆர் மகன், பகைவனுக்கு அருள்வாய் உள்ளிட்ட படங்கள் வெளியாகட் தயார் நிலையிலுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :