என்னது நான் ஹீரோவா நடிக்கிறேனா? இது எப்ப?? – பா.ரஞ்சித் ட்வீட்டால் அதிர்ச்சியில் கௌதம் மேனன்!
கௌதம் மேனன் ஹீரோவாக நடிப்பதாக வெளியான போஸ்டரை இயக்குனர் பா.ரஞ்சித் ஷேர் செய்திருந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் இயக்குனராக காக்க காக்க, வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் கௌதம் வாசுதேவ் மேனன். சமீப காலமாக பல படங்களில் குணசித்திர கதாப்பாத்திரங்கள், வில்லன் கேரக்டர்களிலும் கௌதம் மேனன் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கௌதம் மேனன் ஹீரோவாக நடிப்பதாக சமூக வலைதளங்களில் வெளியான போஸ்டர் ஒன்றை தனது ட்விட்டரில் பதிவிட்ட இயக்குனர் பா.ரஞ்சித், கௌதம் மேனன் ஹீரோவாக நடிக்கும் அந்த படத்தை எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள கௌதம் மேனன், இந்த தகவல் தனக்கு அதிர்ச்சியாக உள்ளதாகவும், அப்படி தான் எந்த படமும் நடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் அந்த பதிவை பா.ரஞ்சித் நீக்கியுள்ளார்.