புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 3 நவம்பர் 2020 (18:02 IST)

மின்னல் வேகத்தில் படத்தை முடித்த பா ரஞ்சித் – நன்றி தெரிவித்த ஆர்யா!

சல்பேட்டா பரம்பரை படத்தின் ஆர்யா சம்மந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கி முடித்துள்ளார் இயக்குனர் பா ரஞ்சித்.

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளியான காலா திரைப்படத்துக்கு பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின் சல்பேட்டா என்ற திரைப்படம் உருவாக உள்ளது. இதில் ஆர்யா பாக்ஸராக நடிக்க உள்ளார். இதற்காக அவர் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.

கொரோனா காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் இப்போது படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் இப்போது சென்னையை அடுத்த ஈவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வந்தது. இந்நிலையில் ஆர்யா சம்மந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையும் இயக்குனர் பா ரஞ்சித் படமாக்கி முடித்துவிட்டாராம்.

இதுகுறித்து டிவிட்டரில் நன்றி தெரிவித்துள்ள ஆர்யா ‘இந்த படத்தில் நடிக்கும் அற்புத வாய்ப்பைக் கொடுத்த பா ரஞ்சித்துக்கு நன்றி. கேமராமேன் முரளி மாதிரி வேகமாக யாருமே இருக்க முடியாது. விஷுவல் ட்ரிட் கொடுத்துள்ளார். கே 9 ஸ்டுடியோஸ் இல்லாமல் இந்தப் படத்தைக் கற்பனை கூடச் செய்து பார்த்திருக்க முடியாது. நடிகர்கள் கலை, பசுபதி, சந்தோஷ், ஜான் விஜய் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்தனர். நிறைய கற்றுக் கொண்டேன். முதல் பார்வை மிக விரைவில்’ எனக் கூறியுள்ளார்.