வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 2 நவம்பர் 2020 (18:26 IST)

கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவித்த ’’சென்னை கிங்ஸ் வீரர்’’ ! ரசிகர்கள் அதிர்ச்சி

அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் நட்சத்திர வீரர் ஷேன் வாட்சன் ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது டுவிட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா இருவரும் ஒரே நாளில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

இருப்பினும் தோனி சென்னை கிங்ஸ்கிற்கு தலைமைப் பொறுப்பேற்று விளையாடினார்.சுரேஷ் ரெய்னா விலகினார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமும் சிறந்த பேட்ஸ்மேனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான  ஷேன் வாட்சன் அனைத்து அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும்  ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது டுவிட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.