பிக்பாஸ் 2: மீண்டும் ஓவியா மற்றும் பிரபல நடிகர்கள்
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே தற்போது திரையுலகில் நல்ல வாய்ப்புகளை பெற்றுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் நாயகியான ஓவியா மூன்று படங்கள் நடித்துவருகிறார். அதேபோல் ரைசா, ஹரிஷ் ஆகியோர் இணைந்து ஒரு படத்திலும், ஜூலி இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார். இவற்றில் அனிதாவின் வாழ்க்கை வரலாற்று
திரைப்படமும் ஒன்று.
இந்த நிலையில் விரைவில் பிக்பாஸ் 2, ஒளிபரப்ப ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், இந்த முறையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. வரும் ஜூன் முதல் தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற பிரபல நடிகர்களுக்கு வலைவீசப்பட்டுள்ளது. அவர்களில் முக்கியமானவர்கள் ஜெயம் ரவி மற்றும் ஆர்யா. இருவரும் இன்னும் தங்கள் முடிவை சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிக்பாஸ் 1 நிகழ்ச்சியின் மூலம் கோடிக்கணக்கானவர்களின் உள்ளங்களை கவர்ந்த ஓவியா மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சம்மதம் தெரித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து மூன்று மாதங்கள் அவரால் படப்பிடிப்புக்கு செல்லாமல் இருக்க முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கடந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும், அதன்மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து கட்சி ஆரம்பித்த கமல், இந்த முறை அந்த கட்சியை ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.