ஓவியாவை ஏன் பிடிக்கும் தெரியுமா? – ஆரவ் பதில்

aarav
CM| Last Updated: வெள்ளி, 9 மார்ச் 2018 (16:44 IST)
ஓவியாவை ஏன் பிடிக்கும் என்பதற்கான காரணத்தைத் தெரிவித்துள்ளார் ஆரவ்.


 
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். இந்த நிகழ்ச்சியில் தான் ஓவியாவுக்கும், ஆரவ்வுக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. ஆனால், ஆரவ் அதை மறுத்தார். இதனால், ஓவியா மனமுடைந்தார். தற்போது அந்த விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தனக்கு ஏன் ஓவியாவைப் பிடிக்கும் என்பதற்கான காரணத்தைத் தெரிவித்துள்ளார் ஆரவ். “நாம் நாமாக இருப்பதுதான் இந்த உலகத்திலேயே மிகக் கஷ்டமான விஷயம். ஏதோ ஒரு வகையில் பெரும்பாலான இடங்களில் நாம் நடித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், அப்படி இல்லாமல் ஓவியா எல்லா இடத்திலும் அவராகவே இருக்கிறார். அதனால்தான் அவரை மக்களுக்குப் பிடித்திருக்கிறது. ஆர்மி அளவுக்கு ரசிகர்கள் கிடைக்கும் அளவுக்குப் புகழ் பெற்றதற்கும் இதுதான் காரணம்” என்று கூறியுள்ளார் ஆரவ்.


இதில் மேலும் படிக்கவும் :