வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 24 செப்டம்பர் 2020 (11:54 IST)

ஓடிடி வரவால் திரையரங்குகள் வளர்ச்சி பெறும் – முன்னணி இயக்குனர் கருத்து!

ஓடிடி பிளாட்பார்ம்களின் வரவால் திரையரங்குகள் வளர்ச்சிதான் பெறும் என்று இயக்குனர் சீனுராமசாமி தெரிவித்துள்ள்ளார்.

கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு 150 நாட்களுக்கு மேல் ஆகிறது. இந்நிலையில் படங்களை எல்லாம் ஓடிடி பிளாட்பார்ம்களில் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் முடிவு செய்து சில திரைப்படங்கள் ரிலிஸ் ஆகிவிட்டன. சில ரிலிஸுக்கு தயாராக உள்ளன.

ஓடிடியில் ரிலிஸ் ஆவதால் திரையரங்குகளின் வளர்ச்சி பாதிக்கப்படும் எனக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால் அவ்வாறு பாதிக்கப்படாது என இயக்குனர் சீனுராமசாமி தெரிவித்துள்ளார். அவர் ‘தொலைக்காட்சி வந்தபோது திரையரங்கங்கள் அழிந்துவிடும் என சொல்லப்பட்டது. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. அதே போலதான் ஓடிடியின் வருகையாலும், திரையரங்கு வளர்ச்சி பெறும்.’ எனக் கூறியுள்ளார்.

சீனுராமசாமி இயக்கியுள்ள இடம் பொருள் ஏவல் மற்றும் மாமனிதன் ஆகிய படங்களும் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக செய்யப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.