வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 23 செப்டம்பர் 2020 (18:34 IST)

கடல் தாண்டி வேலைக்கு செல்லும் இந்தியர்களுக்கும் சமர்பணம் – விஜய் சேதுபது பட அடுத்த சிங்கில் ரிலீஸ்

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தென்னிந்திய சினிமாவில் புகழ்பேற்ற நடிகர் விஜய் சேதுபதி, பாலிவுட் சினிமாவிலும் கால்பதித்துள்ளார்.

இந்நிலையில் அவரது ரசிகர்களுக்கு பெரும் விருந்து வைக்கும் விதத்தில் அடுத்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவரவுள்ள ஒரு படம் ஐந்து மொழிகளில் வெளிவரவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.


க/பெ ரணசிங்கம் படத்தில் முதல் பாடல் சமீபத்தில் ரிலீசானநிலையில், இப்படம் ஓடிடியில் ரிலீசாகிறது.

இப்படம் தமிழ் , தெலுங்கு,  மலையாளம் , கன்னடம் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீசாகிறது. இதுகுறித்த முறையாக அறிவிப்புகள் வெளிவரும் என தெரிகிறது.

இப்படத்தில் முதல் சிங்கில் ஏற்கனவே வெளியாகி வைரலான நிலையில் இன்று இரண்டாவது சிங்கில் வெளியாகியுள்ளது. இப்பாடலை வைரமுத்து எழுதியுள்ளார்.

இதுகுறித்து நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது,

#Paravaigala - குடும்ப வறுமையை தீர்க்க கடல் தாண்டி வேலைக்கு செல்லும் இந்தியர்களுக்கும், அவர்கள் நினைவில் ஏங்கி தவிக்கும் குடும்பத்திற்க்கும் சமர்ப்பணம்! எனத் தெரிவித்துள்ளார்.