வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 16 அக்டோபர் 2020 (11:01 IST)

4 பேர் மட்டுமே படம் பார்க்க வந்ததால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சி!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் நேற்று முதல் திறக்கப்பட்டது என்பது தெரிந்ததே. தமிழகம் தவிர கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் நேற்று திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை என்பதால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
50% இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும் என மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறையில் கூறியிருந்த நிலையில் 10 சதவீத இருக்கைகள் கூட நிரம்பாமல் இருந்தது திரையரங்கு உரிமையாளர்களை அதிர்ச்சி அடையச் செய்தது
 
குறிப்பாக டெல்லி மும்பை கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள ஒரு சில திரையரங்குகளில் 4 முதல் 10 பார்வையாளர்கள் மட்டுமே தியேட்டருக்கு வருகை தந்திருந்தார்கள் என்பதும் இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் கடும் கவலை அடைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
ஓடிடியில் சொகுசாக வீட்டில் உட்கார்ந்து கொண்டே படம் பார்ப்பதன் சுகத்தை அனுபவித்து விட்ட பொதுமக்கள் இனிமேல் திரையரங்குக்கு வருவார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது அது மட்டுமின்றி முன்னணி நடிகர்களின் திரைப்படங்களும் புதிதாக வெளிவர வில்லை என்பதாலும் பழைய திரைப்படங்கள் மட்டுமே நேற்று திரையரங்குகளில் திரையிடப்பட்டது என்பதாலும் கூட்டம் வரவில்லை என்பது ஒரு காரணமாகும்
 
ஒருவேளை முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளிவந்தாலும் முதல் மூன்று நாட்கள் மட்டுமே திரையரங்குகளில் கூட்டம் வர வாய்ப்பிருப்பதாகவும் இனி எதிர்காலத்தில் ஓடிடியின் ஆதிக்கம் தான் அதிகம் இருக்கும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது