1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 13 அக்டோபர் 2020 (16:50 IST)

’’தியேட்டர் வரும் பார்வையாளர்களுக்கு இலவச மாஸ்க்’’...தியேட்டர் உரிமையாளர்கள் திட்டம்

கொரோனா காலகட்ட ஊரடங்கில் சுமார் 200 நாட்களுக்கு மேலாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் திரையரங்கு வரும் ரசிகர்களுக்கு இலவச முககவசம் வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

சமீபத்தில் திரையரங்குகள் திறப்பது எப்போது என தற்போது அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அளித்துள்ளார்.

அக்.15 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதித்துள்ள நிலையில் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படுவது எப்போது என கேள்வி எழுந்திருந்தது.

தியேட்டர்களை திறந்தால் மூன்று மணி நேரம் சிறிய இடத்திற்குள் அதிக மக்கள் இருக்கும்படியான சூழல் உண்டாகும். எனவே, தியேட்டர்கள் திறப்பது குறித்து மத்திய அரசும் தமிழக மருத்துவர் குழுவும் அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் தமிழக முதல்வர் அதுகுறித்த முடிவை விரைவில் அறிப்பார் என கூறப்பட்டிருந்தது.

இதற்கு தற்போது அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அளித்துள்ளார். திரையரங்குகள் அக்டோபர் 20 அல்லது 22 ஆம் தேதி திறக்கப்பட வாய்ப்பு என அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல் அளித்துள்ளார்.

இந்நிலையில், திரையரங்கு வரும் மக்களுக்கு இலவச முககவசம் வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

மேலும் 60 % முதல் 70 % பார்வையாளர்களை திரையரங்கினுள் அனுமதிக்க வேண்டுமென திரையரங்கு உரிமையாளர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.