திங்கள், 16 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 15 டிசம்பர் 2024 (10:19 IST)

AI டெக்னாலஜி எல்லாம் இல்ல.. ஒரிஜினல் AK தான்! - வைரலாகும் அஜித்குமார் புகைப்படம்!

Ajithkumar

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வைரலாகத் தொடங்கியுள்ளது.

 

 

தமிழின் பிரபல நடிகரான அஜித்குமார் தற்போது படம் நடிப்பதுடன், கார் ரேஸ் போன்றவற்றிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் அவரது படங்கள் அடிக்கடி அல்லாமல் அவ்வப்போது ரிலீஸாகி வருகிறது. தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி என அஜித்குமாரின் படங்கள் அடுத்தடுத்து தயாராகி வருகின்றன.

 

வீரம் படத்திற்கு பிறகு அஜித்குமார் தொடர்ந்து தனது பெப்பர் சால்ட் லுக்கிலேயே படங்களில் நடித்து வந்தார். வலிமையில் மட்டும் கொஞ்சம் கெட்டப்பை மாற்றியிருந்தார். தற்போது விடாமுயற்சியிலும் அதே பெப்பர் சால்ட் லுக்கில் நடித்துள்ளார். இந்நிலையில்தான் குட் பேட் அக்லியில் அஜித்தின் தோற்றம் குறித்த புகைப்படம் வெளியாகியுள்ளது. 

 

க்ளீன் ஷேவ் செய்து, டை அடித்த முடியுடன் பழைய ‘காதல் மன்னன்’ போல தோன்றும் அஜித்குமாரின் தோற்றம் அஜித் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. மற்ற ரசிகர்களுக்கு அந்த ஹீரோக்களின் படம் ரிலீஸாகும் நாள்தான் கொண்டாட்ட நாள். ஆனால் அஜித் ரசிகர்களுக்கு பட அப்டேட் வெளியானாலே கொண்டாட்ட நாள்தான். அப்படியாக இந்த நியூ லுக்கையும் கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.

 

Edit by Prasanth.K