ஞாயிறு, 15 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 15 டிசம்பர் 2024 (10:56 IST)

விடுதலையான அல்லு அர்ஜூன்! நேரில் சந்தித்த ராணா, நாக சைதன்யா! கண்ணீர் விட்ட சமந்தா!

Allu Arjun released

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், இளம்பெண் பலியான வழக்கில் கைது செய்யப்பட்டு இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 

 

அல்லு அர்ஜுன் நடித்து வெளியான புஷ்பா 2 படத்தை பார்க்க இளம்பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உள்ள தியேட்டருக்கு சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார். அறிவிப்பின்றி அல்லு அர்ஜுன் அந்த தியேட்டருக்கு வந்ததே கூட்ட நெரிசலுக்கு காரணம் என கூறி அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

 

அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விடுக்கப்பட்ட நிலையில், ஜாமீனுக்கு விண்ணப்பித்து 50 ஆயிரம் பிணை தொகை செலுத்தி விடுதலையாகியுள்ளார். அல்லு அர்ஜுன் தனது வீட்டிற்கு சென்று குடும்பத்தினருடன் இணைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அல்லு அர்ஜுன் விடுதலையானதும், மற்ற தெலுங்கு நடிகர்களான ராணா டகுபதி, நாக சைதன்யா, உபேந்திரா, விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட பலர் அவரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

 

அல்லு அர்ஜுனை குடும்பத்தினர் வரவேற்கும் வீடியோவை பகிர்ந்துள்ள சமந்தா ‘ நான் அழவில்லை’ என கண்ணீர் மல்க கூறியுள்ளார். இந்த காட்சியை பார்க்க காத்திருந்ததாக விக்னேஷ் சிவனும், அல்லு அர்ஜுனின் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

 

Edit by Prasanth.K