பார்ட்டி என அழைத்து தவறாக நடந்துகொண்டார் அந்த பிரபலம்… நிவேதா பெத்துராஜ் புகார்!
நடிகை நிவேதா பெத்துராஜ் பாலியல் ரீதியாக தனக்கு தொல்லைக் கொடுக்கப்பட்ட சம்பவம் குறித்து பேசியுள்ளார்.
உலகம் முழுவதும் பெண்களுக்கு பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து மி டூ என்ற இயக்கம் உருவானது. அதிலும் சினிமாவில் இருக்கும் பெண்கள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை வைக்கும்போது அது அதிகமாக கவனத்தில் விழுந்தது. ஹாலிவுட்டில் இருந்து ஆரம்பித்து இந்திய சினிமா வரை இந்த புகார் அலை எழுந்தது.
இந்நிலையில் இப்போது நடிகை நிவேதா பெத்துராஜ் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து பேசியுள்ளார். அதில் ஒருமுறை எனக்கு ஒரு பார்ட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அங்கு சென்ற போது ஒரு பிரபலம் என்னை அந்தரங்கமான இடங்களில் தொட்டு பேசி பாலியல் தொல்லை கொடுத்தார் எனக் கூறியுள்ளார். ஆனால் அந்த பிரபலம் யார் என்பதை வெளிப்படுத்தவில்லை.