இனி அவருக்கு பதில் இவர்... சீரியலில் இருந்து விலகிய ஆல்யா மானசா!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த சீரியலின் இரண்டாம் தற்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சித்து - ஆல்யா மானசா ஜோடியாக நடித்து வருகின்றனர்.
ஆல்யா தற்ப்போது கர்ப்பமாக இருக்கிறார். விரைவில் அவருக்கு குழந்தை பிறக்க உள்ளது. இதனால் சீரியலில் இருந்து தற்காலிகமாக விலகியிருக்கிறார். குழந்தை பிறந்து சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஆல்யா, சந்தியா வேடத்தில் நடிக்க தொடங்குவாராம். இந்நிலையில் தற்போது சந்தியா வேடத்தில் நடிக்க ஒரு நடிகை வந்துள்ளார்.