திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : வியாழன், 29 டிசம்பர் 2022 (13:30 IST)

ஹிந்தி தெரியாது என்று ஊரை ஏமாற்றும் சித்தார்த் ! நெட்டிசன்கள் விளாசல்

siddharth
நடிகர் சித்தார்த்திற்கு ஹிந்தி நன்றாக தெரியும் என்றும் அவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்றும் நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
 
மதுரை விமான நிலையத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் தன்னிடமும் தனது பெற்றோரிடமும்  ஹிந்தியில் பேசியதாக சித்தார்த் குற்றச்சாட்டு தெரிவித்தார். 
 
இந்த நிலையில் சித்தார்த் ஹிந்தி படங்களில் நடித்து உள்ளார் என்றும் ஹிந்தி சரளமாக பேசுவார் என்றும் ஆனால் ஹிந்தி தெரியாது என்று ஊரை ஏமாற்றுகிறார் என்றும் அவர் ஹிந்தி பேசிய வீடியோவை டுவிட்டரில் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர் 
 
மேலும் சித்தார்த்தின் பெற்றோர்களை சோதனை செய்தது தஞ்சாவூரை சேர்ந்த தமிழ் பெண் என்றும் அவர் தமிழில் தான் பேசினார் என்றும் ஆனால் சித்தார்த்தின் குடும்பத்தினர்தான் ஹிந்தியில் பேசிக் கொண்டு வந்தனர் என்றும் மதுரை விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்
 
மொத்தத்தில் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே ஹிந்தி என்ற ஆயுதத்தை கையிலெடுத்து சித்தார்த் குற்றச்சாட்டு கூறியுள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
 
Edited by Mahendran