வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 28 டிசம்பர் 2022 (12:29 IST)

இந்தியில் பேசி டார்ச்சர்; விமான நிலைய அதிகாரிகள் மீது சித்தார்த் புகார்!

பிரபல தமிழ் நடிகரான சித்தார்த் மதுரை விமான நிலையம் சென்றபோது சி.ஆர்.பி.எப் அதிகாரிகள் மோசமாக நடந்து கொண்டதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் சித்தார்த். அவ்வபோது இவர் சமூக வலைதளங்களில் வெளியிடும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் தனக்கு மதுரை விமான நிலையத்தில் ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அதில் ஆள் இல்லா விமான நிலையத்தில் ‘சிஆர்பிஎஃப்’ அதிகாரிகள் தங்களை சோதனை செய்ததாகவும், அப்போது இந்தியில் பேசி அவர்கள் கடுமையாக நடந்து கொண்டதாகவும் கூறியுள்ளார். அவரது பெற்றோர் பையில் வைத்திருந்த சில்லறை காசுகளை கூட எடுக்க சொன்னதோடு, ஆங்கிலத்தில் பேச சொல்லியும் கேட்காமல் தொடர்ந்து இந்தியில் பேசியதோடு, இந்தியாவில் இப்படிதான் இருக்கும் என்றும் கூறியதாக பதிவிட்டுள்ளார்.

மேலும் வேலையில்லாதவர்கள் எல்லாம் அதிகாரத்தை காட்டுகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.