வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 1 ஜூன் 2019 (11:06 IST)

நேசமணிக்கு அடுத்து என்.ஜி.கே.வுக்காக பிராத்தனை – நெட்டிசன்ஸ் குறும்பு !

கடந்த சில நாட்களாக ப்ரே பார் நேசமணி என்ற ஹேஷ்டேக் பிரபலமாக இருக்க நேற்று முதல் சமூகவலைதளங்களில் பிரே பார் என்.ஜி.கே என்ற ஹேஷ்டேக் பிரபலமாகி வருகிறது.

சமூக வலைதளங்களில் கடந்த 3 நாட்களாக நேசமணிக்காக பிராத்தனை செய்யுங்கள் என்ற ஹேஷ்டேக் ட்ரண்டிங்கில் இருந்தது. பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவை பின்னுக்குத் தள்ளி உலக அளவில் ட்ரண்ட் ஆனது. இந்த ஹேஷ்டேக்கின் தாக்கம் மெதுவாகக் குறைய ஆரம்பிக்கும் வேளையில் என்.ஜி.கே படம் நேற்று வெளியானது.

இளைஞர்கள் அரசியலில் இறங்குவது குறித்தானப் படம் என மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் வெளியான இந்தப் படம் ரசிகர்களின் பொறுமையை சோதித்துள்ளது. படம் பார்த்து அதிருப்தியடைந்த ரசிகர்கள் தங்கள் அதிருப்திகளை சமூகவலைதளங்களில் கொட்டி வருகின்றனர். அதில் ஒரு சிலர் நேசமணி பொழச்சிகிட்டாரு ஆனா என்.ஜி.கே பொழைக்குமா என்று தெரியவில்லை. அதனால் பிரே பார் என்.ஜி.கே என சமூகவலைதளங்களில் ஹேஷ்டேக்கை துவங்கியுள்ளனர்.