புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 31 மே 2019 (11:14 IST)

என் வெற்றிக்கு வன்னியர் வாக்குகளும் காரணம் – வேல்முருகனுக்கு திருமாவளவன் நன்றி !

மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்ற திருமாவளவன் கூட்டணிக் கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்த திருமாவளவன் சிதம்பரம் தொகுதி வெற்றிக்காக நன்றி தெரிவித்தார். பின்னர் இருவரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர் ‘வன்னிய சமூகத்தினருக்கு நான் எதிரி சிலர் திட்டமிட்டு பரப்பிவந்தார்கள். அந்த அவதூறு பிரச்சாரம்  இந்த தேர்தல் வெற்றி மூலம் முறியடிக்கப்பட்டது வன்னியர் சமூகம் மற்றும் பிற சமூக மக்களும் மனமுவந்து வாக்களித்ததன் விளைவாகத்தான் நான் வெற்றிபெற்றேன்’ எனக் கூறினார்.

ரஜினி திராவிடக் கட்சிகளில் கரிஷ்மாட்டிக் தலைவர்கள் இல்லை என சொல்லியிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த திருமா ‘ கலைஞர், ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் இருந்த போது கூட இவ்வளவு பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றதில்லை. பல தொகுதிகளில் 5 லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ரஜினி, கமல் இருவரும் கவர்ச்சி அரசியலை பாராட்டி வருகிறார்கள். அதை மோடி பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார். ரஜினியும் கமலும் மோடியின் கூட்டாளிகள் என்பதில் உண்மை இருக்கலாம் ’எனக் கூறியுள்ளார்.