வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 5 ஜூலை 2019 (20:26 IST)

நேர்கொண்ட பார்வை ரிலிஸ் தேதி இதோ - போனி கபூர் பேட்டி!

தமிழ் சினிமாவின் தலையாய  நடிகர் அஜித் எச். வினோத் இயக்கும் ‘நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்துவருகிறார். இந்த படம் கடந்து ஆண்டு பாலிவுட்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘பிங்க்' படத்தின் ரீமேக். 
 
இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இப்படத்திஇல் அஜித்திற்கு ஜோடியாக முதன் முறையாக தமிழில் வித்யா பாலன் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், இந்தி ‘பிங்க்’ படத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா தாரங் நடிக்கின்றனர். மேலும், அர்ஜுன் சிதம்பரம், ரங்கராஜ் பாண்டே, அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர், அபிராமி வெங்கடாசலம் உட்பட பலர் நடித்துள்ளனர். 
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால், இப்படம் வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வரவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால், சில விநியோகஸ்தர்கள் படத்தை கொஞ்சம் முன்பே ரிலிஸ் செய்ய சொன்னார்கள். அதனை கருத்தில் கொண்டு பிரபல நாளிதழுக்கு தயாரிப்பாளர் போனிகபூர் கொடுத்த பேட்டியில், படம் ஆகஸ்ட் 10ம் தேதிக்கு முன்பே திரைக்கு வரும் என்று கூறியுள்ளார்.
 
ஆகையால் இதை வைத்து பார்க்கையில் எல்லோரும் கூறியது போல் நேர்கொண்ட பார்வை படம் வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி திரைக்கு வரும் என தெரிகின்றது.