அஜித் நடித்த அதே 'வாலி' கேரக்டர்: அனுஷ்கா பெருமிதம்

Last Modified திங்கள், 1 ஜூலை 2019 (21:14 IST)
அஜித், சிம்ரன், ஜோதிகா நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'வாலி'. எஸ்.ஜே.சூர்யா இயக்கியிருந்த இந்த படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார். அதில் ஒரு வேடம் காது கேட்காத, வாய் பேச முடியாத வில்லன் வேடம். இந்த கேரக்டருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இன்றளவும் அஜித் சிறப்பாக நடித்த கேரக்டர்களில் ஒன்று இந்த கேரக்டர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் 'பாகுபலி' புகழ் அனுஷ்கா, அஜித் நடித்த அதே காது கேளாத, வாய் பேச முடியாத கேரக்டரில் நடித்து வருகிறார். 'தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் என நான்கு மொழிகளில் உருவாகி வரும் 'சைலன்ஸ்' என்ற படத்தில் தான் அனுஷ்கா காது கேளாத, வாய் பேச முடியாத தொழிலதிபர் கேரக்டரில் நடித்து வருகிறார். 20 ஆண்டுகளுக்கு முன்பு, எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் வாலி படத்தில், அஜித் நடித்த அதே கதாபாத்திரத்தில் நடிப்பது தமக்கு பெருமையாக உள்ளது என்று நடிகை அனுஷ்கா சமீபத்தில் பேட்டி ஒன்றில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு ஆண்டாக எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் உடல் எடையை குறைப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வந்த அனுஷ்கா தற்போது 'சைலன்ஸ்' தவிர, சிரஞ்சீவியின் 'சயிர நரசிம்மரெட்டி' படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு, தமிழ் படங்களில் நடிக்க அவர் கதை கேட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதுஇதில் மேலும் படிக்கவும் :