வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 30 டிசம்பர் 2018 (16:07 IST)

'தல 58', 'தல 59' இரண்டு படத்திலும் ஸ்வேதா! நஸ்ரியாவின் மாஸ் டுவீட்

தல அஜித் நடித்த 'விஸ்வாசம் திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி யூடியூபில் சாதனைகளை உடைத்து கொண்டு வருகிறது. 12 நிமிடத்தில் ஒரு மில்லியன், 25 நிமிடத்தில் இரண்டு மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ள இந்த டிரைலர் இன்னும் சில மணி நேரங்களில் பத்து மில்லியன் பார்வையாளர்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த டிரைலரை கவனமாக பார்த்தவர்களுக்கு அஜித் கூறும் ஒரு வசனம் ஞாபகத்திற்கு வரும். பேர் தூக்குதுரை ஊர் தேனி மாவட்டம், பொண்டாட்டி பேர் நிரஞ்சனா, பொண்ணு பேரு ஸ்வேதா' என்ற வசனம் இருப்பது தெரியவரும்

இந்த வசனம் குறித்து நடிகை நஸ்ரியா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் 'தல 58 படத்திலும் ஸ்வேதா, தல 59' படத்திலும் ஸ்வேதா' என குறிப்பிட்டுள்ளார். அதாவது அஜித் நடிக்கவுள்ள அடுத்த படமான 'தல 59' படத்தில் தான் ஸ்வேதா என்ற கேரக்டரில் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே ஒரு டுவீட்டை நஸ்ரியா பதிவு செய்திருந்தார் என்பது குறிப்ப்பிடத்தக்கது.