ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 15 நவம்பர் 2021 (18:17 IST)

’காத்துவாக்குல ரெண்டு காதல்’ அட்டகாசமான நயன்தாரா போஸ்டர்

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று காலை இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது என்பதும் அதில் விஜய்சேதுபதியின் அழகான போஸ்டர் இருந்தது என்பதையும் பார்த்தோம்
 
அதேபோல் இன்று மதியம் இந்த படத்தின் நாயகிகளில் ஒருவரான சமந்தாவின் போஸ்டர் வெளியானது. இந்த நிலையில் சற்று முன்னர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அட்டகாசமான போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது
 
மேலும் இந்த படத்தில் நயன்தாரா, கண்மணி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் டிசம்பரில் வெளியாக உள்ளது