1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 12 நவம்பர் 2021 (18:50 IST)

நயன்தாரா நீக்கம் பொய்: உண்மையை ஒப்புக்கொண்ட வதந்தி பரப்பியவர்கள்!

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகிவரும் லயன் என்ற திரைப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடித்து வந்த நிலையில் இந்த படத்திலிருந்து நயன்தாரா நீக்கப்பட்டு விட்டதாக ஒரு சிலர் யூடியூபில் வதந்தியை பரப்பி விட்டனர் 
 
ஆனால் பாலிவுட் திரை உலகை பொறுத்தவரை நாயகி, நாயகன், வில்லன் உள்பட எந்த ஒரு நடிகையையும் அவ்வளவு எளிதில் நீக்க பார்க்க மாட்டார்கள் என்பது வழக்கமான நடைமுறை. எனவே இது பொய்யான தகவல் என்று பலர் கூறினர் 
 
இந்த நிலையில் வதந்தி பரப்பியவர்களே தற்போது நயன்தாரா மீண்டும் அந்த படத்தில் நடிப்பதாகவும் ஒரு சில கண்டிஷன்களை தளர்த்தி கொண்டதாகவும் தற்போது சப்பைக்கட்டு கட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா அந்த படத்தில் ஆரம்பத்தில் இருந்தே நடித்து வருகிறார் என்பதும் இடையில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்பதுதான் உண்மை என்பதும் குறிப்பிடத்தக்கது