திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 26 ஜூலை 2022 (14:18 IST)

பிரபல பாலிவுட் இயக்குனருக்கு நயன்தாரா ரசிகர்கள் கண்டனம் !

பிரபல பாலிவுட் இயக்குனர் கரண்ஜோருக்கு நயன் தாரா ரசிகர்கள் கடு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பாலிவுட் சினிமாவில், ஷாருக்கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.

இவர் இயக்க மட்டுமின்றி தயாரிப்பும், டிவி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடத்தி வருகிறார். இதில், பிரபலமான நிகழ்ச்சி, காஃபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில்  சினிமா நட்சத்திரங்கள், இயக்குனர்,, தயாரிப்பாளர், விளையாட்டு நட்சத்திரங்களும் கலந்துகொண்டு தங்களின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளனர்.

இந்த  நிகழ்ச்சியில் சமீபத்தில் சமந்தா கலந்துகொண்டு, கரணின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அப்போது, ஒரு கேள்விக்குப் பதிலளித்த சமந்தா, தென்னிந்தியாவின் மிகப்பெரிய கதா நாயகி நயன் தாராவுடன் எனக் கூறினார். இடைமறித்த கரண், தன்னுடைய லிஸ்டில் நயன் தாரா இல்லை எனக் கூறினார். இதைச் சமாளித்தபடி சமந்தா பேட்டியைத் தொடர்ந்தார்.

இந்த  நிகழ்ச்சியைப் பார்த்த  நயன்தாரா ரசிகர்கள்  லேடி சூப்பர் நயன் தாராவைப் பற்றி தெரிந்துகொண்டு பேச வேண்டும் என்று சமூக வலைதளத்தில் கருத்துப்பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், சமீபத்தில் வெளியான காத்துவாக்குல காதல் என்ற படத்தில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நயன்தாரா – சமந்தா இணைந்து விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.