வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 15 ஜூலை 2022 (09:15 IST)

நயன்தாரா திருமண வீடியோ ஓடிடியில் எப்போது? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

நயன்தாரா & இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் சமீபத்தில் நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடந்தது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணம் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி நடைபெற்றது. மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற இந்த திருமணத்திற்கு நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டனர். இந்த திருமணத்துக்குப் பத்திரிக்கையாளர்கள் அழைக்கப்படவில்லை. அதுபோல கலந்துகொண்ட பிரபலங்களுக்கும் செல்போன் அனுமதி வழங்கப்படவில்லை.

இதனால் நயன்தாரா திருமண வீடியோ முன்னணி ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக ஓடிடி தளம் ஒன்று 25 கோடி ரூபாய் வரை நயன்தாரா தம்பதிகளுக்கு கொடுத்ததாக தகவல்கள் பரவின. ஆனால் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் திருமணம் முடிந்து ஒரு மாதத்துக்கும் மேலாகிவிட்ட நிலையில் இதுவரை அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. ரசிகர்களும் இப்போது அந்த வீடியோ குறித்து முன்பு இருந்த எதிர்பார்ப்பில் இல்லை.

இந்நிலையில் சமீபத்தில் வெளியாகியுள்ள ஒரு தகவலின் படி, சம்மந்தப்பட்ட ஓடிடி நிறுவனம் இப்போது தங்கள் முடிவில் இருந்து பின் வாங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் ஓடிடியில் திருமண வீடியோ வெளியாக வாய்ப்பில்லை என்றும் சொல்லப்படுகிறது.