திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 17 நவம்பர் 2023 (07:57 IST)

தியாகராஜ பாகவதர் பயோபிக்கில் நடிக்கப் போவது இவர்தான்!

தமிழ் சினிமாவின் ஆரம்பகால கட்டத்தில் சூப்பர் ஸ்டாராக விளங்கியவர் தியாகராஜ பாகதவர். இவர் நடித்த ஹரிதாஸ், அசோக்குமார் மற்றும் பவளக்கொடி ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தன. ஆனால் கொலை வழக்கு ஒன்றில் குற்றம்சாட்டப்பட்டு சிறைக்கு சென்று, விடுதலை செயப்பட்டபின் அவரின் மார்க்கெட் சரிய தொடங்கியது. அதன் பிறகு அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைய, தன் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் நலிவடைந்த நிலைக்கு சென்றார்.

அப்படிபட்ட நடிகரான தியாகராஜ பாகவதரைப் பற்றி இப்போதுள்ள தலைமுறையினருக்கு அதிகமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் இயக்குனர் ஏ எல் விஜய் மேற்பார்வையில் சோனி லிவ் தளத்தில் தியாகராஜ பாகவதரின் பயோபிக் உருவாக உள்ளது.

அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடந்துவரும் நிலையில் இதில் தியாகராஜ பாகவதராக நடிகர் நட்டி நட்ராஜ் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.