ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 11 நவம்பர் 2023 (07:27 IST)

இளையராஜா பயோபிக் உறுதியானது… அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!

தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவர் இளையராஜா. 1976 ஆம் ஆண்டு வெளிவந்த அன்னக்கிளி படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான அவர் இதுவரை 1400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இந்திய அளவில் ஏன் உலக அளவிலேயே அதிகபடங்களுக்கு இசையமைத்தவராக சாதனை படைத்துள்ள இளையராஜாவின் பயோபிக் தற்போது உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்க உள்ளதாகவும், அந்த படத்தில் இளையராஜா வேடத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் படத்தை தயாரிக்கும் கனெக்ட் மீடியா நிறுவனம், இப்போது இந்த படம் உருவாக உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கனெக்ட் மீடியா நிறுவனத்தோடு, மெர்க்குரி பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தைத் தயாரிக்க உள்ள நிலையில் 2024 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி 2025 ஆம் ஆண்டு இந்த படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.