சூர்யாவின் கங்குவா படத்தில் ‘நாட்டு நாட்டு’ பாடல் நடன இயக்குனர்!
சூர்யாவின் 42 ஆவது படமான கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார். இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தில் தற்போது நிகழ்காலத்தில் நடக்கும் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டன. இதுவரை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டைட்டில் மட்டுமே அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. படத்தை 3டி தொழில்நுட்பம் மற்றும் 10 மொழிகளில் உருவாக்குவதாக படக்குழு அறிவித்துள்ளது.
சமீபத்தில் படத்தில் இடம்பெறும் பிரம்மாண்டமான பாடல் காட்சி ஒன்றை படக்குழு படமாக்கியது. இந்த பாடலை ஆஸ்கர் வரை சென்ற நாட்டு நாட்டு பாடலை வடிவமைத்த நடன இயக்குனர் பிரேம் ரக்ஷித் வடிவமைத்துள்ளார். இந்த பாடலில் சூர்யாவுடன் இணைந்து நூற்றுக் கணக்கான நடனக் கலைஞர்கள் நடனமாடியுள்ளதாக சொல்லப்படுகிறது.