செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 2 ஜூன் 2023 (07:36 IST)

கங்குவா அடுத்த கட்ட ஷூட்டிங் எப்போது?… விறுவிறுப்பாக நடக்கும் செட் வேலைகள்!

சூர்யா 42 படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் அரச காலத்து கதை என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் மோஷன் டீசர் ஒன்றை வெளியிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் சிறுத்தை சிவா. இந்நிலையில் தற்போது படத்தின் டைட்டில் “கங்குவா” என பெயரிடப்பட்டுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை திஷா பதானி நடிக்கிறார். தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகிறது, சூர்யா நடிக்கும் முதல் 3டி தொழில்நுட்ப படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் “கங்குவா” டைட்டில் டீசரை ஸ்டுடியோ க்ரீன் தனது யூட்யூப் சேனலில் வெளியிட்டுள்ள நிலையில் அது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் கொடைக்கானலில் நடந்து முடிந்தது. அங்கே பிரம்மாண்டமான ஒரு போர்க்கள சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கி முடித்துள்ளனர் படக்குழுவினர்.

இதையடுத்து அடுத்த கட்ட ஷூட்டிங்க்குக்காக செட் வேலைகள் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வேலைகள் முடிந்ததும், அதில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.