1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 26 ஜூன் 2023 (08:42 IST)

லியோ-வின் ‘நான் ரெடி’ பாடலைப் போல சூர்யாவின் கங்குவாவில் பிரம்மாண்ட பாடல்!

சூர்யாவின் 42 ஆவது படமான கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் புராண காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் தற்போது நிகழ்காலத்தில் நடக்கும் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டன. இதுவரை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டைட்டில் மட்டுமே அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கங்குவா திரைப்படம் 10 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் நிலையில் இப்போது படத்தில் இடம்பெறும் பிரம்மாண்டமான பாடல் காட்சி ஒன்றை படக்குழு படமாக்கி வருகிறது. இந்த பாடலில் சூர்யாவுடன் இணைந்து 1500 நடனக் கலைஞர்கள் நடனமாடியுள்ளதாக சொல்லப்படுகிறது.

சமீபத்தில் வெளியான விஜய்யின் லியோ படத்தின் நான் ரெடி பாடலில் இதுபோல விஜய்யோடு 2000 நடனக் கலைஞர்கள் ஆடியதாக சொல்லப்பட்டது. பாடலின் சில காட்சி துணுக்குகளும் இணையத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.