பாலிவுட்டில் அறிமுகமாகும் சூர்யா.. புராணக் கதையில் கர்ணன்!
சூர்யா இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த கதை நிகழ்காலம் மற்றும் அரச காலத்து கதை என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் மோஷன் டீசர் ஒன்றை வெளியிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் சிறுத்தை சிவா.
இந்த படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு சூர்யாவுக்கு சுதா கொங்கரா இயக்கும் படம் மற்றும் வெற்றிமாறனின் வாடிவாசல் ஆகிய படங்களில் நடிக்க உள்ளார் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது புதிதாக பாலிவுட்டில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
இந்த படத்தை ராகேஷ் ஓம்பிரசாத் மெஹ்ரா இயக்க உள்ளார். இந்த படத்தில் பல மொழிகளின் முன்னணி நடிகர்கள் நடிப்பார்கள் என சொல்லப்படுகிறது. இதில் சூர்யா கர்ணன் வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.