புதன், 8 பிப்ரவரி 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified புதன், 7 ஏப்ரல் 2021 (20:31 IST)

ஹீரோவான சதீஷுக்கு வாழ்த்து தெரிவித்த 2 கிரிக்கெட் பிரபலங்கள்!

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான சதீஷ் ஹீரோ ஆனார் என்பதும் அவர் ஹீரோவாகும் திரைப்படத்தின் பூஜை இன்று நடந்தது என்பதும் தெரிந்ததே
 
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் குக் வித் கோமாளி பவித்ரா நாயகியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அறிமுக இயக்குனர் கிஷோர் குமார் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது
 
இந்த நிலையில் காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக பதவி உயர்வு பெற்றுள்ள சதீஷ்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக பிரண்ட்ஸ் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டரில் சதீஷ்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் 
 
அதேபோல் தமிழக கிரிக்கெட் வீரரான யார்க்கர் கிங் நடராஜனும் தனது டுவிட்டர் பக்கத்தில் சதீஷ்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த இரண்டு டுவிட்டுகளூம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது