நாயகியான ‘குக் வித் கோமாளி’ பவித்ரா: நாயகன் இவர்தான்!

நாயகியான ‘குக் வித் கோமாளி’ பவித்ரா: நாயகன் இவர்தான்!
siva| Last Modified புதன், 7 ஏப்ரல் 2021 (16:48 IST)
நாயகியான ‘குக் வித் கோமாளி’ பவித்ரா: நாயகன் இவர்தான்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில் வரும் வாரம் இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இந்த இறுதிப் போட்டியில் தகுதி பெற்றவர்களில் ஒருவரான பவித்ரா லட்சுமி தற்போது ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

விஜய் நடித்த பிகில் உள்பட பல வெற்றிப் படங்களை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் தான் பவித்ரா கதாநாயகி ஆகிறார். இந்த படத்தில் நாயகனாக காமெடி நடிகர் சதீஷ் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அறிமுக இயக்குனர் கிஷோர் ராஜ்குமார் என்பவர் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு அஜிஷ் அசோக் என்பவர் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தில் ஒரு நாய் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும் அந்த நாயின் அனிமேஷன் கேரக்டர் குறித்த பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் வந்து சதீஷ் உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :