நானி மிருனாள் தாக்கூர் நடிக்கும் ‘ஹாய் நான்னா’ படத்தின் டிரைலர் ரிலீஸ்!
நானி நடிப்பில் ஆக்சன் மற்றும் மாஸ் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக தசரா திரைப்படம் ரிலீஸாகி வெற்றி பெற்றது. அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இந்த படத்தை இயக்க கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருந்தார்.
தசரா படத்தின் வெற்றியை அடுத்து நானி அடுத்து நடிக்கும் படத்துக்கு “ஹாய் நானா” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் டிசம்பர் 7 ஆம் தேதி தென்னிந்திய மொழிகளில் ரிலீஸ் ஆகிறது.
இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிருனாள் தாக்கூர் நடிக்கிறார். கணவன் மனைவி மற்றும் குழந்தையை மையமாகக் கொண்ட ஒரு கதைக்களமாக இந்த படம் இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் பீல்குட் டிரைலர் இணையத்தில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.