திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 23 செப்டம்பர் 2024 (14:25 IST)

நாட்டாமை பட நடிகை ராணியின் மகள் தார்னிகா கதாநாயகியாக அறிமுகம்!

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'எம்ஜிஆர் மகன்', 'டிஎஸ்பி' என படங்களை தொடர்ந்து இயக்கிய பொன்ராம், தனது அடுத்த திரைப்படத்தில் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியனை இயக்கவுள்ளார்.

இந்த படத்தில் சரத்குமார், காளி வெங்கட், முனீஷ்காந்த், கல்கி ராஜா உள்ளிட்டோர் நடிக்குபாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உடன் பொன்ராம் முதல் முறையாக கை கோர்த்துள்ளார். 

இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க தார்னிகா என்ற அறிமுக நடிகை ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர் 90 களில் பிரபலமாக இருந்த நடிகை ராணியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. ராணி ராமராஜன் நடித்த வில்லுப் பாட்டுக்காரன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் அவரால் கதாநாயகியாக பெரிய வெற்றிகளைக் கொடுக்க முடியவில்லை. அதனால் கவர்ச்சி நடிகை ரூட்டுக்கு மாறினார். அப்படி அவர் நடித்த படங்களில் ஒன்றான நாட்டாமை அவருக்குப் பெரும்புகழை தேடித்தந்தது.