ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (12:41 IST)

தனது சொந்த ஊரில் இன்று முதல் படப்பிடிப்பை துவக்கிய இயக்குநர் பொன்ராம் - பட பிடிப்புக்காக வந்த சரத்குமார், சண்முக பாண்டியனுக்கு தேமுதிகவினர் உற்சாக வரவேற்பு!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூச்சிபட்டியைச் சேர்ந்தவர் இயக்குநர் பொன்ராம். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கிய இவர் டிஎஸ்பி படத்திற்கு பின் தற்போது கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் மற்றும் சரத்குமாரை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். 
 
கடந்த சில நாட்களுக்கு முன் தேனியில் படப்பிடிப்பு துவங்கிய சூழலில், இன்று முதல் தனது சொந்த ஊரான பூச்சிபட்டியில் அடுத்தகட்ட படப்படிப்பை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
 
10 நாட்களுக்கும் மேலாக நடைபெறும் இந்த படப்படிப்பிற்காக இன்று பூச்சிபட்டி கிராமத்திற்கு வந்த விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் மற்றும் நடிகர் சரத்குமாருக்கு தேமுதிக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர், ஊரில் உள்ள தேவர் சிலைக்கு சண்முகபாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 
தொடர்ந்து அவருடன் போட்டோ எடுத்துக் கொண்ட பெண்கள் கண்ணீர் மல்க கேப்டன் கேப்டன் என முழக்கமிட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.