'நானே வருவேன்’ சிங்கிள் பாடல்: பாடியவர் இவர் தான்!
இன்று மாலை நானே வருவேன் சிங்கிள் பாடல் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த பாடலை பாடியவர் யார் என்பது குறித்த தகவல் சற்றுமுன் வெளியாகி உள்ளது.
தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் நானே வருவேன். கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரித்த இந்த படத்தின் சிங்கிள் பாடல் இன்று மாலை 4.40 மணிக்கு வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று வெளியாகும் என்றும் இந்த பாடலை யுவன்சங்கர்ராஜா பாடி உள்ளார் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தயாரிப்பாளர் தானு அறிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
தனுஷ், எல்லி அவ்ரம், இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவும், பிரசன்னா படத்தொகுப்பும் செய்துள்ளனர்.