1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 4 செப்டம்பர் 2018 (17:53 IST)

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியீடு!

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக அதிதி ராவ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.
இந்த படத்தில் 'காற்று வெளியிடை' மூலம் கவனம் ஈர்த்த அதிதி ராவ் ஹீரோயினாகவும், இயக்குநர் ராம் வில்லனாக நடிக்கவிருக்கிறாராம். தவிர, முக்கியமான போலீஸ் கதாபாத்திரத்தில் இயக்குநர் ராம் நடிக்க இருக்கிறாராம். இந்த படத்தைத் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ மூலம்  உதயநிதியே தயாரிக்கிறார். 
 
இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ள இந்தப் படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது இதன் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் ஷூட்டிங்கை வருகிற 7-ஆம் தேதி துவங்கத் திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். 
 
இந்நிலையில் படத்துக்கு ‘சைக்கோ’ என டைட்டில் வைக்கப் பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.