1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 22 ஜூலை 2018 (15:54 IST)

காதலியின் மூளையை வறுத்து தின்ற சைக்கோ வாலிபர்

ரஷ்யாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது காதலியின் மூளையை வறுத்துத் தின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய நாட்டை சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவன் 45 வயது பெண்மணியை காதலித்து வந்தான். அந்த இளைஞர் சீரியல் கில்லர்கள், நரபலி, மனிதர்களை கொன்று தின்பது போன்ற புத்தகத்தை அதிகம் படித்து வந்துள்ளார்.
 
இதனால் சைக் ஆன அந்த இளைஞர், தனது காதலியை வீட்டிற்கு வரவழைத்து, அவரை பீர்பாட்டிலால் அடித்துக் கொன்றுள்ளார். பின் அவரது மூளையை எடுத்து வறுத்து சமைத்து சாப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் அந்த சைக்கோ கில்லரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அவனை போலீஸார் சிறையில் அடைத்துள்ளனர்.