திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 24 ஜனவரி 2019 (18:44 IST)

என்னோட ஃபோனை ஹேக் பண்ணிட்டாங்க! - கதைவிடும் ஹன்சிகா?

நடிகை ஹன்சிகா  சில தினங்களுக்கு முன்பு மியாமிக்கு சுற்று பயணம் செய்துள்ளார். அங்கே அவர் உள்ளாடையுடன் எடுத்துக்கொண்ட படு கவர்ச்சியான புகைப்படம் முதன் முறையாக இணையத்தளத்தில் உலாவந்து பலரையும் அதிர்ச்சி அடையவைத்தது.  


 
இந்நிலையில் தற்போது  தனது அந்தரங்க புகைப்படங்கள் வெளியானதை குறித்து விளக்கம் கொடுத்துள்ளார் நடிகை ஹன்சிகா. அதாவது,   எனது போன் மற்றும்  ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யபட்டுவிட்டது அதனை அது சரி செய்யும் பணியில் தற்போது ஈடுபட்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
 
நடிகை ஹன்சிகாவின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் , எல்லாத்தையும் வெளியிட்டுவிட்டு இப்போது கதை சொல்றியா என்று கிண்டலடித்து வருகின்றனர். மேலும்  ஹன்சிகா இதில்  இருந்து தப்பிக்கவே இப்படி சாக்கு போக்கு சொல்கிறார் என்றும் ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர். 
 
இது போன்று தங்களின் அந்தரங்க புகைப்படங்கள்  வெளியிடுவதும் பிறகு அதனை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என்று சமாளிப்பதும் நடிகைகளுக்கு வாடிக்கையாகிவிட்டது.